Categories
தேசிய செய்திகள்

சாக்லேட் திருடிய மாணவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

மேற்குவங்கம் அலிபுர்தௌர் மாவட்டத்தில் ஒரு வணிக நிறுவனத்தில் பெண் ஒருவர் சாக்லேட் திருடிய வீடியோ வைரலானதை அடுத்து, அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அதாவது கல்லூரி மாணவி சாக்லேட் திருடும் வீடியோ வைரலானதால், அதிர்ச்சியடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சுபாஷ்பள்ளி எனும் இடத்திலுள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவியின் உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாணவியின் தந்தை கூறியதாவது, சென்ற செப்டம்பர் 29ம் தேதி அவர் தன் சகோதரியுடன் அருகிலுள்ள கடைக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு அவர் சாக்லேட் திருடும்போது பிடிபட்டுள்ளார். இதையடுத்து இதற்காக கடை உரிமையாளரிடம் உரியபணத்தையும் கொடுத்து மன்னிப்புக் கேட்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் சாக்லேட் திருடும்போது மாட்டிக்கொள்வது மற்றும் மன்னிப்புக் கேட்கும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதைத் அடுத்த மாணவி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள், அந்த வணிக நிறுவனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு, வீடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி இருக்கின்றனர்.

Categories

Tech |