விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று அசல்கோளாறு எலிமினேட் செய்யப்பட்டார்.இறுதியில் அசிம் மற்றும் அசல் கோளாறு இருவரும் மற்றும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் யார் காப்பாற்றப்படுவார் என நினைக்கிறீர்கள் என கமல் கேட்டபோது பலரும் அசல் தான் உள்ளே இருப்பார் என கூறினார்கள்.
அதிலும் குறிப்பாக நிவாஸினி அசல் கண்டிப்பாக இங்கே இருக்க வேண்டும் என கூறி இருந்தார்.அதே சமயம் என்னை எதற்காக இங்கே நிற்க வைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை என அசல் கோளாறு கூறினார். பின்னர் இறுதியாக அசல் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற பிறகு நிவாஸினி கதறி கதறி அழுதார். மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர்.அசலுக்கு ஒரு பெரிய ஆஃபர் ஏதாவது கிடைத்திருக்கும் அதனால் தான் அவர் வெளியே போகிறார் எனக் கூறி நிவாஷினிக்கு பலரும் ஆறுதல் கூறினர்.
இதனிடையே அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு நிவாஷினியை கட்டிப்பிடித்து,அப்படி இப்படி இருக்கணும்னா நீயும் வெளியே வா என சொல்லி உள்ளார். அது மட்டுமல்லாமல் அசல் சட்டை ஒன்றே நிவாஷினி வைத்துள்ளார். அதை நீயே வைத்துக் கொள் என கொடுத்துவிட்டு அசல் சென்றுள்ளார்.
Enna Soldran parunga 😪😪
Asal Kolaaru #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/wwtrNkNlhU— Dr Kutty Siva (@drkuttysiva) October 30, 2022
அதன் பிறகு கமல்ஹாசன் அவரிடம் நக்கலாக ஒரு கேள்வி கேட்டார்.நீங்கள் வந்த நோக்கம் நிறைவேறி விட்டதா என்று கமல் கேட்க அதற்கு அசல் இல்ல சார் இன்னும் பேலன்ஸ் இருக்கு இருந்திருந்தால் பண்ணி இருப்பேன் இதுவரை பண்ணதே போதும் நான் ஹேப்பி தான் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/BBFollower7/status/1586773716838780929