Categories
சினிமா

பிரபல சீரியல் நடிகரின் மனைவி திடீர் மரணம்…. 7 மாதம் கோமாவில் இருந்தாரா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சின்னத்திரை பிரபல நடிகரான பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி இன்று திடீரென மரணம் அடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் பரத் கல்யாண் . பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கூட இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் மனைவி கடந்த ஏழு மாதங்களாக கோமாவில் இருந்த நிலையில் இன்று அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவர்களுக்கு தருண் என்ற மகனும் நிகிதா என்ற மகளும் உள்ளனர்.பிரியதர்ஷினி பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் HR ஆக பணியாற்றி வந்தார். இதனிடையே அவர் கோமாவில் இருந்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |