தமிழகத்தில் ஓய்வு பெற்ற 41 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் 10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக 7 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில் அன்றாடம் நாட்டில் நடக்கும் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் செய்தியாளர்கள் ஓய்வுக்கு பிறகு சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசின் சார்பில் மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த 202-23 ஆம் ஆண்டில் செய்தியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கால ஆண்டு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் 41 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் கட்ட துவக்கமாக 7 பேருக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதனையடுத்து செய்தி மற்றும் விளம்பர துறை மானிய கோரிக்கையில் செயல்படும் பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்துவதற்காக பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பணியில் இருக்கும் போது செய்தியாளர் ஒருவர் இருந்தால் அவருடைய குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியமானது 5 லட்சத்திலிருந்து 10 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டதோடு, 20 பேரின் வாரிசுதாரர்களுக்கு ரூ. 10 லட்சம் வீதம், மொத்தம் 2 கோடி ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் செய்தியாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கீடு, முறையான அங்கீகார அடையாள அட்டை பெற்றுள்ள செய்தியாளர்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் மருத்துவ உதவி தொகை 2 லட்சத்திலிருந்து 2,50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.