சுனாமி காலகட்டத்திற்கு பின் அடிக்கடி கடல் நீர் உள்வாங்குவதும் சீற்றம் அதிகரிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு நைனாம் வலப்பு அருகே உள்ளது கோத்தி கடற்கரை பல சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடல் நீர் உள்வாங்கி இருப்பதை கண்டு கடற்கரைக்கு வந்த மக்கள் மிகவும் அதிர்ச்சடைந்துள்ளனர். சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனை பார்த்த பலரும் சுனாமி அறிகுறியாக இருக்கலாம் என பயமடைந்துள்ளனர் ஆனால் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இதனை மறுத்து இருக்கிறது.
மேலும் அரபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. அதனால் கடல் நீர் உள்வாங்கியது பற்றி கவலைப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. கடல் நீர் உள்வாங்கி இருப்பதால் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். மேலும் உள்வாங்கிய கடல் நீர் இரட்டிப்பு வேகத்துடன் மீண்டும் வரக்கூடும் அதனால் ஆபத்து எனவும் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது கடல் நீர் உள்வாங்கிய பின் அங்கு அதிக எண்ணிக்கையிலான மீன்கள் கரை ஒதுங்கலாம் என எண்ணி ஏராளமான மக்கள் கோழிக்கோடு கடற்கரைக்கு வந்து கரை ஒதுங்கிய மீன்களை பிடித்து சென்றுள்ளனர்.