சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போன் எண்ணில் இருந்து சிறுமிக்கு அழைப்பு வந்தது. அது தவறான அழைப்பு என தெரிந்ததால் சிறுமி அதனை துண்டித்தார். தொடர்ந்து அந்த நம்பரில் இருந்து அழைப்புகள் வந்த பிறகு அந்த நபருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த நபர் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
கடந்த 25- ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டத்தைச சேர்ந்த 19 வயது வாலிபர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் சிறுமியை மீட்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.