Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் செயலி மூலம் பெற்ற பணம்…. கடனை அடைக்க வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் பகுதியில் ரமீலா(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்து சென்ற போது மர்ம நபர் ஒருவர் மூதாட்டி அணிந்திருந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பாலா(25) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் பட்டதாரியான பாலா செல்போன் செயலி மூலம் பெற்ற கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டியாக 2 லட்சம் ரூபாய் வரை கடன் ஆனதால் நண்பரை பார்க்க சென்றுள்ளார். வ இடத்தில் தங்க சங்கிலியை பறித்ததை பாலா ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்த தங்க சங்கிலியை போலீசார் கைப்பற்றினர்.

Categories

Tech |