மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு போதையில் தினேஷ் வீட்டின் மாடிக்கு தூங்க சென்றுள்ளார். அதிகாலை மொட்டை மாடிக்கு சென்ற பெற்றோர் தினேஷ் குப்புற படுத்தபடியும் அவரது இடதுகை உயர் மின்னழுத்த கம்பியில் தொட்ட படியும் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்வதற்காக தினேஷ் மீன் கம்பியை பிடித்தாரா? அல்லது போதையில் எதிர்பாராமல் உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி இருந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.