Categories
தேசிய செய்திகள்

OMG: பகத்சிங் வேடத்தில் நடிக்க ஒத்திகை பார்த்த சிறுவன்… திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்… பெரும் சோகம்…!!!!!

பகத்சிங் வேடத்தில் நடிப்பதற்காக ஒத்திகை பார்த்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ர துர்கா டவுன் கவுளகோர்ட் பேராங்கானை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் – பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் இருந்துள்ளார் இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வருகின்ற ஒன்றாம் தேதி தனியார் பள்ளியில் நடைபெறும் கன்னட ராஜியோத்சவா விழாவில் சஞ்சய் பகத்சிங் வேடம் அணிந்து நடிக்க இருக்கின்றார். இதற்காக வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது பகத்சிங்கே தூக்கிலிடும் காட்சியை சஞ்சய் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது முகத்தை துணியால் மூடி கயிற்றை கட்டி சோபாவில் இருந்து குதித்து இருக்கின்றார். ஆனால் அந்த சமயத்தில் அவனது கழுத்தை கயிறு இறுக்கி உள்ளது அப்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் சஞ்சய் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் வெளியே சென்றிருந்த அவனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது சஞ்சய் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்தும் பரங்கி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |