தமிழ் திரைப்படங்களுக்கு இப்போது உலக அளவில் பெரிய ரசிகர் கூட்டமே உருவாகி உள்ளது. தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து உலக அளவில் சூப்பர் ஹிட் அடித்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் உலக அளவில் வரலாறு காணாத வசூலை செய்துள்ளது. இந்நிலையில் தமிழ் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வரவேற்பு பெற்று வரும் மாநிலம் என்றால் அது கேரளா தான்.
அதன்படி கேரளவில் வசூல் வேட்டை நடத்திய டாப் 3 தமிழ் திரைப்படங்களை குறித்து பார்ப்போம். அதில் 1 வது உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் உள்ளது. இந்த திரைப்படம் ரூ.40.1 கோடி வசூல் செய்துள்ளது. அதனைப் போல பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான பொன்னியன் செல்வன் 2 வது இடத்தில் உள்ளது. இந்தத் திரைப்படம் ரூ.24.15 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இறுதியாக 3 வது விஜய்யின் பிகில் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ரூ.19.80 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த லிஸ்டில் அஜித் மற்றும் ரஜினி படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.