குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பிரதமர் பேசியதாவது “தான் இங்கு இருந்தாலும் தன் மனம் மோர்பி பால விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துடன் தான் இருப்பதாக தெரிவித்தார். ஒரு இதயத்தில் வழி நிறைந்திருந்தாலும், இன்னொரு பக்கம் கடமைக்கான பாதை அழைப்பதாகவும் மோடி உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும் ஒரு இந்திய மொழியை இன்னொரு இந்திய மொழிக்கு எதிரியாக்கும் பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது. மக்கள் ஒருவரை ஒருவர் சேர்க்காமல், ஒருவரை ஒருவர் விட்டு விலகிச் செல்லும் வகையில் வரலாறு முன்வைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஆட்சி மேற்கொண்ட அரச குடும்பங்கள், நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு புதிய அமைப்புக்காக தங்களது உரிமைகளை அர்ப்பணித்தனர் என்று அவர் பேசினார்.