Categories
தேசிய செய்திகள்

Twitter: ஃபேக் ஐடிக்கள் வைத்து அராஜகம்!…. ஒரு ரசிகரின் மனக்குமுறல்….!!!!

அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், இதுகுறித்து கடிதம் ஒன்று டுவிட்டர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து இதனை நிரூபிக்கும் அடிப்படையில் எலான் மஸ்க் தரப்பின் கடிதம் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஒரு பங்குக்கு $54.20 என்ற பரிவர்த்தனையை முடிப்பதே தங்களுடைய நோக்கம் என்றும் டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது.

இதுபற்றி டெலாவர் நீதிமன்றம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க்கிற்கு அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் டுவிட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு தமிழ் சினிமா ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் பொங்கல் அன்று தல-தளபதி படங்கள் வெளியாவதால் இப்போதே பல ஃபேக் ஐடிக்கள் நடிகர்களின் படங்களை வைத்துக்கொண்டு அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், அவற்றை ஒழித்து டுவிட்டரை அமைதிப் பூங்காவாக மாற்றும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |