குஜராத்தில் பாலம் அருந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள கேபிள் பாலத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 400க்கும் மேற்பட்டோர் சென்றபோது, எடை தாங்காமல் அந்த பாலம் அருந்து விழுந்தது. இதனால் 400க்கும் மேற்பட்டோர் மச்சு ஆற்றில் தவறி விழுந்தனர். இதனையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. இரவு பகலாக மீட்ப பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 140-க்கும் மேற்பட்டவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ராணுவம், கடற்படை, விமானப்படை, பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர் என அனைவரும் இணைந்து இந்த மீடபு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மீட்பப்பணியில் சற்று தாமதம் ஏற்படுவதற்கு ஆற்று நீர் சகதியாக காணப்படுவதாக சொல்லப்படுகிறது. சகதியாக காணப்படுவதால் ஆழத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சற்று சிக்கல் நீடிப்பதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மோர்பி என்ற இடத்தில் தொங்கு பாலம் அருந்து விழுந்த அந்த விபத்தின் உடைய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது பார்ப்பவர்களை பதற வைக்கிறது.
இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் மற்றும் மத்திய அரசு சார்பில் உயிரிழந்தோருக்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
CCTV of Bridge #MorbiBridgeCollapse #Morbi #MorbiBridge pic.twitter.com/svGMR1Id6P
— BRIJESH (@Brijesh151189) October 31, 2022