இந்தியாவை டிஜிட்டல் மையமாக்குவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைத்து விதமான சேவைகளையும் ஒரே தளத்தில் பெறுவதற்கு விரும்புகிறார்கள். ஆனால் காப்பீடு துறை மற்றும் பின்தங்கியிருப்பதாக இருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்த நிலையில், பாலிசிகள் முதல் செட்டில்மெண்ட் வரை அனைத்து வகையானவையும் ஒரே தளத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது. நான் அதன்படி அனைத்து வகையான இன்சூரன்ஸ் தேவைகளும் பீமா சுகத்தில் கிடைக்கும்.
இதில் பொதுக் காப்பீடு முதல் ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு, என அனைத்து வகையான காப்பீடுகளையும் பெறலாம். இந்நிலையில் பீமா சுகம் வலைதளமானது தற்போது தயாராகி வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான காப்பீடுகளையும் ஒரே தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை ஐஆர்டிஏ தலைவர் பண்டா தெரிவித்துள்ளார். மேலும் காப்பீடு பெறுதல், பிரீமியம் செலுத்துதல், விற்பனை செய்தல் மற்றும் செட்டில்மெண்ட் கோருதல் என அனைத்துக்கும் ஒரே தீர்வாக பீமா சுகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.