பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கும் தங்கலான் எனும் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப் பிடிப்பு சென்ற 18ஆம் தேதி முதல் ஆந்திராவிலுள்ள கடப்பாவில் துவங்கியது.
கோலார் தங்கவயல் பின்னணி கதைகள் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது கடப்பாவில் இருந்து இடம்பெயர்ந்து மதுரையில் நடந்து வருகிறது. 2 வாரங்கள் மதுரையில் படப் பிடிப்பை நடத்திய பின் மீண்டுமாக ஆந்திராவுக்கு படக்குழு செல்ல இருக்கின்றனர். அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பை இந்தியா முழுக்க பலதரப்பட்ட லொகேஷன்களில் நடத்த இயக்குனர் ரஞ்சித் திட்டமிட்டு உள்ளார்.