Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து – விராத்கோலி சொதப்பல் …!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி திணறி வருகின்றது.

இந்தியா – நியூஸிலாந்து அணிக்களுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகின்றது. முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய இந்தியா அணி  242 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக விஹாரி 55 ரன் எடுத்து அசத்த நியூஸிலாந்து அணியின் ஜேமிசன் 5 விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸ் ஆடிய

நியூசிலாந்து  அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் டாம் லாதம் அதிகபட்சமாக 52 ரன் விளாச முகமது ஷமி 4 வீழ்த்தினார். பின்னர் 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறி இரண்டாம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டு நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் எடுத்துள்ளது. அதிகபட்சமாக புஜாரா 24 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். விகாரி 5 ரன்னுடனும் , ரிஷப் பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கு ட்ரெண்ட் பெல்ட் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்த்தில் உள்ளனர். இன்னும் 3 நாள் ஆட்டம் இருக்கையில் நியூஸிலாந்து அணியின் கையே ஓங்கிள்ளது.

Categories

Tech |