Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பம்பர் ஊதியம் உயர்வு?…. விரையில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்ந்துள்ளது. அவர்களுக்கு தற்போது 38% ஊதியம் வழங்கப்படுகிறது. எனினும் சென்ற பல வருடங்களாக மத்திய அரசு ஊழியர்களின் பிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்கவேண்டும் எனும் கோரிக்கை இருந்துவருகிறது. இது கவனிக்கப்படாமல் இருந்த சூழ்நிலையில், இப்போது மத்திய அரசு இதில் கவனம்செலுத்தி வருகிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்சம் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே அவர்களை மகிழ்ச்சிப்படுத்த மாற்றுவழிகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பிட்மெண்ட் பாக்டர் அதிகரிக்கப்படக்கூடும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது பிட்மெண்ட் பாக்டரின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்சசம்பளம் ரூபாய்.18000 ஆக இருக்கிறது. பிட்மெண்ட் ஃபாக்டர் 2.57மடங்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனை 3.68 மடங்காக உயர்த்தவேண்டும் என்பதே மத்திய ஊழியர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இவ்வாறு இருந்தால் குறைந்தபட்சம் சம்பளம் ரூபாய்.26,000 ஆக இருந்திருக்கும். தற்போது பிட்மெண்ட் பாக்டரை 3 மடங்காக உயர்த்த அரசு ஒப்புக் கொள்ளலாம் என்பது தான் புது விஷயம். இருந்தாலும் அடுத்த வருடம் பட்ஜெட்டுக்கு பிறகே இது தொடர்பான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

இதனிடையில் பிட்மெண்ட் ஃபாக்டர் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கக்கூடும். ஒரு மத்திய ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூபாய். 18,000 என வைத்துக்கொள்வோம். அதன்பின் அலவன்ஸ்களை சேர்த்து சம்பளம் 18,000X2.57 = ரூ.46,260 ஆக இருக்கும். பரிந்துரைகளின்கீழ் இது அதிகபட்சமாக கருதப்பட்டால், சம்பளம் 3.68 மடங்கு 26000X3.68 = ரூ 95,680 ஆக இருக்கும். ஊழியர்களுக்கு இவற்றில் பம்பர்பலன் கிடைக்கும். அதேநேரம் 3 மடங்கு பிட்மெண்ட் பாக்டர் இருப்பின், சம்பளம் 21000X3=ரூபாய்.63,000ஆக இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதில் பிட்மெண்ட் பாக்டர் முக்கியமான பங்கு வகிக்கிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அவர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் தவிர்த்து பிட்மெண்ட் பாக்டர் வாயிலாகவும்  நிர்ணயிக்கப்படுகிறது. இது தான் மத்திய ஊழியர்களின் சம்பளத்தை இரண்டரை மடங்குக்கும் மேல் உயர்த்தும் காரணி ஆகும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பிட்மெண்ட் பாக்டர் 2.57 ஆகும்.

மத்திய ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும்போது ​​அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (DA), பயணப்படி வீட்டு வாடகை கொடுப்பனவு போன்றவை 7-வது ஊதியக்குழுவின் பிட்மெண்ட் பாக்டர் 2.57-ஐப் பெருக்கி கணக்கிடப்படுகிறது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குரிய பணவீக்கத்தின் சராசரியை அரசாங்கம் கணக்கிடுகிறது. அதன்பின் பணவீக்க சராசரி 2வது பாதியில் கணக்கிடப்படுகிறது. இதனடிப்படையில் DA அதிகரிப்பு முடிவு செய்யப்படுகிறது. அகவிலைபப்டி எப்போதும் சராசரி பணவீக்கத்தைவிட அதிகளவு இருக்கும்.

ஜூலை 2022 வரையிலான காலகக்ட்டத்துக்கு அகவிலைப்படி 4 % அதிகரிக்கப்பட்டு 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அகவிலைப்படி அதிகரிப்புக்குப் பின், அதே அடிப்படையில் பயணப் படியும் அதிகரிக்கப்படுகிறது. டிஏ-ன் அதிகரிப்பு TA உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று எச்ஆர்ஏ மற்றும் மெடிகல் ரீயெம்பர்ஸ் மெண்ட்டும் முடிவுசெய்யப்படுகிறது. அனைத்துவித கொடுப்பனவுகளும் கணக்கிடப்பட்டு​மத்திய ஊழியர்களின் மாதாந்திர CTC நிர்ணயம் செய்யப்படுகிறது.  அனைத்து கொடுப்பனவுகள், சம்பளம் இறுதிசெய்யப்பட்டபின், மாதாந்திர வருங்கால வைப்புநிதி (PF) மற்றும் கிராஜுவிட்டியின் பங்களிப்பு வருகிறது. பிஎப் மற்றும் கிராஜுவிட்டி பங்களிப்பானது அடிப்படைசம்பளம், DA உடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மத்திய ஊழியரின் பிஎப் மற்றும் கிராஜுவிட்டி, அதற்குரிய ஃபார்முலாவால் தீர்மானிக்கப்படுகிறது.

Categories

Tech |