Categories
மாநில செய்திகள்

நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு – தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை!

பிளஸ் 2 பொதுத் தோவுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 பேர் எழுத உள்ளனர். இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்வு பொறுப்பாளர்கள் தேர்வு நிலவரங்களை கண்காணிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வுமார்ச் 24ம் வரை நடைபெறும். இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகும்.

தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்துப் பார்க்கலாம். அடுத்த 5 நிமிடம் மாணவர் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் சுயவிவரங்கள் சரிபார்க்கப்படும். அதன்பின் மாணவர்கள் காலை 10.15 முதல் மதியம் 1.15 வரை 3 மணி நேரம் தேர்வு எழுதலாம். தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் தயார் நிலையில் உள்ளன.

Categories

Tech |