Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ஒரே ஒரு ஆப், மொத்த பணமும் காலி ஆயிடும்…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருந்தாலும் மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதனால் ஆன்லைன் மோசடி கும்பல்களிடம் பணத்தை இழக்காமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்ரினினிக் என்ற மாள்வேர் தற்போது பரவி வருவதாக சைபர் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.அதாவது இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்களை தாக்குவது இதன் வேலை.

பல வங்கிகளின் மொபைல் செய்திகளை இந்த மால்வேர் தாக்குவதாக தெரிகின்றது.அதனால் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்படுவது மட்டுமல்லாமல் அவர்களின் பணமும் கொள்ளை போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் sbi உள்ளிட்ட 18 வங்கிகள் அபாயத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இது கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து பரவி வரும் நிலையில் தற்போது வருமானவரித்துறை செயலி என்ற வேடத்தில் பரவி வருவதாக கூறப்படுகின்றது. IAssist என்ற ஆப் பெயரில் பரவி வரும் இந்த செயலி வாடிக்கையாளர்களின் தகவல்களை முடக்குகின்றது.எனவே அடையாளம் தெரியாத செயலை மொபைலில் ஏற்றி ஆபத்துக்கு வழி விட வேண்டாம் என சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |