தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. யசோதா திரைப்படத்தை ஹரி ஹரீஷ் இயக்க, வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கடந்த 27-ம் தேதி வெளியான டிரைலர் வீடியோவை 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா யசோதா படத்தின் டிரைலரை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் நான் கல்லூரி படிக்கும்போது முதன்முதலாக சமந்தாவை பார்த்த போதே அவரை காதலிக்க தொடங்கினேன். இன்று அவர் இருக்கும் நிலையை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.
நான் அவருக்கு தலை வணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார். விஜய் தேவர கொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் இணைந்து தற்போது குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் சமந்தா தற்போது ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்