தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து காண மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மழைக்கால தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவமனை வாயிலாக மருத்துவ முகாம்கள் நடத்தும்படி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும், சித்த மருத்துவர்கள் மூலம் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.