எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து பல வருடங்கள் ஆகிய இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ரோஸ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு கண்காட்சி மூலமாக 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் குஜராத்தில் ரோஸ்கர் மேளா என்ற பெயரில் மாநில அரசு வேலைவாய்ப்பு அளிக்கும் நிகழ்ச்சி நடத்தியது. 2019 முதல் தற்போது வரை காஷ்மீரில் 30,000 பேருக்கு மத்திய அரசு வேலை கொடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அரசின் ஒவ்வொரு திட்டங்களும் அனைவருக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் தங்கள் இலக்கு. மேலும், ஜம்மு காஷ்மீரை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல 2 எய்ம்ஸ், 7 புதிய மருத்துவ கல்லூரிகள் வர உள்ளது. காஷ்மீருக்கு ரயில்கள் மூலம் இணைப்பை ஏற்படுத்துவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது என்றார்.