தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
அஜித் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகை ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். ஷாலினி தங்கை ஷாமிலியும் பிரபல நடிகையாவார்.
இவர் அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இவர் வீரசிவாஜி திரைப்படத்திற்கு பின் சில ஆண்டுகளாக படத்தில் நடிக்காமல் இருக்கின்றார். இந்த நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.