தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முத்துக்குமாரி மற்றும் ஆரோக்கிய செல்வ மேரி உள்ளிட்ட இருவரும் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகின்றார்கள். இவர்கள் இரண்டு பேரும் முதல் மாடியில் இருக்கும் ஆய்வகத்திற்கு செல்வதற்காக லிப்டில் சென்ற போது திடீரென நின்றுவிட்டது. இதனால் இவர்கள் கூச்சலிட்டுள்ளார்கள்.
இவர்களின் சத்தம் கேட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. பின் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு பேரையும் பத்திரமாக மீட்டார்கள். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.