மோர்பி சம்பவத்தில் உயிரிழந்தவ 32 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 4 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு தலா 50,000 நிதி வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் ஆற்றில் விழுந்த பலரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த குடிமக்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மற்றும் பிற மாநில அதிகாரிகளிடம் பேசினேன். உள்ளூர் நிர்வாகம் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது, NDRF யும் விரைவில் சம்பவ இடத்திற்கு வந்து சேரும். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியதாவது, மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்தது ஒரு சோகமான & துரதிருஷ்டவசமான சம்பவம். மாலை 6:30 மணியளவில், 150 பேர் சென்ற மோர்பியில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது. 15 நிமிடங்களில் தீயணைப்புப் படையினர், ஆட்சியர், மாவட்ட எஸ்பி, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்… நானும் சம்பவ இடத்துக்கு வருகிறேன்:
மேலும் குஜராத்தின் மோர்பியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததையடுத்து மீட்புப் பணிகளுக்காக குழுக்களை அவசரமாக அனுப்ப வேண்டும் என பிரதமர் மோடிஉத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
#WATCH | Several people feared to be injured after a cable bridge collapsed in the Machchhu river in Gujarat's Morbi area today. Further details awaited. pic.twitter.com/hHZnnHm47L
— ANI (@ANI) October 30, 2022