டுவிட்டர் நிறுவனம் தனது விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டரை வாங்கியுள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் கட்டண அடிப்படையியான விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டெஸ்லா நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியதாவது. புதிய உரிமையாளரின் தலைமையின் கீழ் டுவிட்டர் எவ்வாறு செயல்பட இருக்கிறது, என்பது குறித்து அந்நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பின்னர் சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் வணிகத்தின் இயல்பான போக்கை போலவே நாங்கள் எங்கள் கட்டண விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். மேலும் டுவிட்டரில் எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு தொடர்புகள் தொடரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.