Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர் தேர்வர்கள் கவனத்திற்கு”…. நாளை தான் கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான தாள் 1-க்கான கணினி வழி தேர்வு கடந்த 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய  தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் WWW.trb.tn.nic.in என்ற  இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த இணையவழியில் ஆட்சேபனை  தெரிவிக்கும் போது உரிய  வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றிதழ்களை  இணைக்க வேண்டும். மேலும் சான்றிதழ்  இணைக்கப்படாத முறையீடுகள்  பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவை அனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

மேலும் தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை  தெரிவிக்க விரும்புவோர் 28-ஆம் தேதி முதல் நாளை மாலை 5.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்ய  வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவை நிராகரிக்கப்படும். மேலும் பாட வல்லுனர்களின் முடிவே இறுதியானது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |