தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த மௌனம் பேசியதே, சாமி, கில்லி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து வருகின்றார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக திரை துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் நடிகை திரிஷா வேகமாக ஒப்பந்தமாகியுள்ளார். அதனால் திரிஷா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பு 1.5 கோடி ஊதியம் பெற்று வந்த திரிஷா தற்போது புதிதாக ஒப்பந்தமாகவும் படங்களுக்கு மூன்று கோடி வரை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.