Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த கர்ப்பிணி…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தாயின் பரபரப்பு புகார்…!!!

கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராயபாளையம் நெசவாளர் காலணியில் கார்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி, பிருந்தா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலை பிருந்தாவின் தாய் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது பிருந்தா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி அன்று பிருந்தா தனது கணவருடன் சகோதரி மங்கையர்கரசி வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

கடந்த 27-ஆம் தேதி கார்த்தி திண்டுக்கல்லில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். அன்று இரவு தனியார் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொண்ட பிருந்தா உணவு வரவழைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பிருந்தா சடலமாக கிடந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்து கார்த்திக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிருந்தாவின் தாய் மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிருந்தா எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |