ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு முகவரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தபால் வந்தது. அதில் ஒரு கடிதமும், பரிசு கூப்பனும் இருந்தது. அந்த பரிசு கூப்பனை திறந்து பார்த்தபோது கார் பரிசு விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து அந்த கடிதத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை அஜித்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் உங்களுக்கு கார்பரிசு விழுந்துள்ளது. நீங்கள் கார் அல்லது அதற்கு உண்டான 14 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
ஆனால் அந்த காருக்கான பதிவு கட்டணம், சரக்கு மற்றும் சேவை வரி, கமிஷன் ஆகியவற்றிற்கு பணம் கொடுக்க வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பி அஜித் குமார் பல்வேறு தவணைகளாக 14 லட்சத்தை அந்த நபருக்கு கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பிறகும் அவர்கள் காரை அனுப்பவில்லை. இதனால் தான் மாற்றப்பட்டதை அறிந்த அஜித்குமார் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.