Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை….!! ஜவளகிரி வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்….. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். நேற்று கர்நாடக வனப்பகுதியில் இருந்து 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் நுழைந்து பல்வேறு குழுக்களாக சுற்றி திரிகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அந்த யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரைவில் இடம் பெயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜவளகிரி வனசரகர் சுகுமார் மற்றும் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் ஓசூர் வனப்பகுதிக்குள் யானைகள் நுழைவதற்கு முன்னர் கர்நாடக வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஜவளகிரி, அகலக்கோட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |