Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பரபர போட்டி…. “நோபால் த்ரில் மேட்ச்”…. 3 ரன்னில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய வங்கதேசம்..!!

வங்கதேசம் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி த்ரில்  வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று சூப்பர் 12 போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரர் சாண்டோ 55 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார்.. மேலும் அஃபிஃப் ஹொசைன் 29 ரன்களும், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 23 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக மாதேவேரே 4, எர்வின் 8 ரன்கள் என சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். தொடர்ந்து மில்டன் ஷும்பா 8, ராசா 0 என அடுத்தடுத்து அவுட் ஆனதால் அந்த அணி 5.5 ஐந்து ஓவரில் 35/4 என இருந்தது. அப்போது சீன் வில்லியம்ஸ்  மற்றும் சக்கப்வா இருவரும் சேர்ந்து பொறுப்புடன் ஆடி வந்த நிலையில், சக்கப்வா 15 ரன்னில் அவுட் ஆனார். ஜிம்பாப்வே ஸ்கோர் 11.2 ஓவரில் 69/5 என இருந்தது.

இதையடுத்து ரியான் பர்ல் – சீனி வில்லியம்ஸ்  இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடி கடைசி வரை எடுத்து சென்றனர். கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. ஷாகிப் அல் ஹசன் வீசிய 19ஆவது ஓவரில் சீன் வில்லியம்ஸ் அரை சதம் அடித்து சிறப்பாக ஆடிவந்த நிலையில், 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். பின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. மொசாடெக் ஹொசைன் வீசிய முதல் பந்தில் 1 ரன்கள் கிடைக்க, இரண்டாவது பந்தில் எவன்ஸ் தூக்கி அடித்து கேட்ச் ஆனார்.

பின் மூன்றாவது பந்தை உள்ளே வந்த ரிச்சர்ட் ங்கராவாவுக்கு லெக் பையால் 4 ரன்கள் கிடைத்தது. அடுத்த 4ஆவது பந்தை லெக் திசையில் சிக்ஸ் அடித்தார். 2 பந்தில் 5 ரன் தேவைப்பட இறங்கி அடிக்கமுயன்ற ங்கராவா(6) ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.. பின் கடைசி அடுத்து வந்த முசர்பானி இறங்கி அடிக்க முயன்று  ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

ஜிம்பாப்வே வெற்றி என நினைத்த நேரத்தில் ரீப்ளேயில் விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் பந்தை ஸ்டம்புகளுக்கு முன் வந்து எடுத்தார். அவரது கையுறை ஸ்டெம்புக்குக்கு முன்னாள் வந்துள்ளது. இதனால் நோ பால்! அறிவிக்கப்பட்டு நீண்ட மறுஆய்வுக்குப் பிறகு, இறுதிப் பந்தை நோ ஹிட் என மீண்டும் எடுக்க வீரர்கள் களத்திற்கு அழைக்கப்பட்டனர். இருப்பினும் கடைசி பந்தை மொசாடெக் ஹொசைன் வீச முசர்பானி பேட்டை வீச பந்து படவில்லை.. கடைசி வாய்ப்பையும் கோட்டை விட்டது ஜிம்பாப்வே..

இதனால் வங்கதேசம் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்  வெற்றி பெற்றது. ரியான் பர்ல் 27 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். வங்கதேச அணியில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும், மொசாடெக் ஹொசைன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். புள்ளிபட்டியலில் வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறது.  ஜிம்பாப்வே 3 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.

Categories

Tech |