சீனாவில் உயிருடன் நண்டு சாப்பிட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்த லூ(39) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிற்கு உயிர் உள்ள நண்டுகளை வாங்கி வந்திருக்கின்றார். அப்போது நண்டு அவரது மகளை கடித்ததால் வலியால் அலறி துடித்துள்ளார் அதன் பின் ஆத்திரமடைந்த லூ குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து அப்படியே உயிருடன் சாப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இரண்டு மாதங்களுக்குப் பின் லூவிற்கு கடமையான முதுகு வலி ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளார். இதனை அடுத்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதற்கு காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழம்பிக் கொண்டிருந்த நிலையில் லூ உயிருடன் நண்டு சாப்பிட்டதை அவரது மனைவி மருத்துவர்கள் இடம் தெரிவித்துள்ளார். அதன் பின் மருத்துவர்கள் லூவிற்கு ரத்த பரிசோதனை செய்துள்ளனர் இதில் லூ மூன்று விதமான பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சூழலில் இதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் லூ கடந்த வாரம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இருப்பினும் மருத்துவ சிகிச்சைக்காக அவர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.