Categories
மாநில செய்திகள்

பணத்திற்காக கொலை….. 18 வருட வழக்கு….. ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை…..!!

கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை துரைசிங்கம் என்பவர் லண்டனில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ஒரு வேலைக்காக சென்னை வந்துள்ளார். சென்னை எழும்பூர் அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்தார். பின் மீண்டும் லண்டன் செல்வதற்காக ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன் என்பவருடன் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஆனால் ஆட்டோ விமானம் நிலையம் நோக்கி செல்லாமல் மாற்று பாதை வழியாக கொரட்டூர் நோக்கி சென்றது. பின் அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டு அவரது நண்பர் என்பவரை வரவழைத்து ஆட்டோவில் இருந்த துரை சிங்கத்திடம் இருந்தால் 50 ஆயிரம் பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து அவரையும் கொலை செய்து தப்பி ஓடிவிட்டனர்.

பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொலை செய்யப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின் அவர்கள் வழக்கை எடுத்து விசாரித்து வந்த நிலையில், அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்து தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் சிறைக்குள் இருந்த ஸ்டீபன் என்பவர்  மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நீதிபதிகள் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

Categories

Tech |