Categories
தேசிய செய்திகள்

உலகில் அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறை… ஸ்டேட்டிஸ்டா நிறுவனம் வெளியிட்ட விவரம்…!!!!!

உலகில் அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறை விவரம் ஒன்றை ஸ்டேட்டிஸ்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் அதிக ஊழியர்களைக் கொண்ட துறையாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறைகள் பற்றிய விவரத்தை ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டேட்டிஸ்டா என்ற நிறுவனம் வருடம் தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2022 ஆம் வருடத்திற்கான பட்டியல் படி உலகில் உள்ள நாடுகளில் அதிக ஊழியர்களைக் கொண்ட அரசுத்துறை என்ற பெயரை இந்திய பாதுகாப்புத்துறை பெற்றிருக்கிறது. மேலும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் இந்த வருட நிலவரத்தின்படி மொத்தம் 29 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் இருக்கின்றனர். ராணுவ வீரர்கள் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கின்ற ஊழியர்கள் என அனைத்து பிரிவு ஊழியர்களும் இதில் அடங்குகின்றனர்.

29 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்களுக்கு அமெரிக்க பாதுகாப்பு துறை இந்த வருடம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் சீன ராணுவம் 25 லட்சம் ஊழியர்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதனை அடுத்து தனியார் நிறுவனங்கள் வரிசையில் உலகில் வால்மார்ட்டை விட வேறு எந்த நிறுவனத்திலும் அதிக ஊழியர்கள் இல்லை. வால்மர் நிறுவனத்தில் 23 லட்சம் ஊழியர்கள் இருக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக அமேசான் நிறுவனத்தில் 16 லட்சம் ஊழியர்கள் இருக்கின்றார்கள். உலக ராணுவ துறைக்கு அதிகமாக செலவழிக்கும் நாடுகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா மற்றும் சீனா இருக்கிறது. இதனை அடுத்து மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ரஷ்யா போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது.

Categories

Tech |