ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே மற்றொரு நிறுவனத்திலும் வேலை பார்க்கின்றனர். இது மூன் லைட்டிங் என்று சொல்லப்படுகிறது. இது தற்போது கண்டுபிடிக்கப்பட்டதால் 50% ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்கள் தான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மற்றொரு நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்கின்றனர். இதன் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தற்போது கலி பெஹரின் தலைவர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஒரு ஊழியர் ஒரே சமயத்தில் 2 நிறுவனங்களில் வேலை பார்ப்பதால் அவர்களுடைய கவனம் சிதறுவதோடு, அதிகமான மன உளைச்சல் மற்றும் உடல்நல பாதிப்புக்கும் ஆளாகின்றனர். அதோடு முழு நேரமாக பணி புரியும் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கவும் நேரிடுகிறது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மற்றொரு நிறுவனத்திலும் வேலை பார்ப்பது கொள்கைகளுக்கு எதிரான ஒன்று என லாம் பாம்பே அறக்கட்டளையின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.