கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டில் தலைநகரான பாக்தாத் பகுதியில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மைதானத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது.
இந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் ஈராக் நாட்டில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.