Categories
சினிமா தமிழ் சினிமா

“உலக நாகரிகத்தை ஒழுங்குபடுத்துங்கள்”…. எலான் மஸ்க்கிற்க்கு கோரிக்கை விடுத்த வைரமுத்து….!!!!!

எலான் மஸ்க்கிற்க்கு கவிதை வாயிலாக வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஜினி நடிப்பில் 1980-ல் வெளியான காளி திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியர் அறிமுகமான வைரமுத்து இதைத்தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கின்றார்.

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு கவிதை வாயிலாக கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே, இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலது சாரி, இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரே களமாகட்டும். ஆனால் பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம் தரம் வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்குபடுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |