Categories
சினிமா தமிழ் சினிமா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு அர்ப்பணிக்கும் “வீச்சருவா வீசி வந்தோம்…” போர்குடி படத்தின் முதல் பாடல் வெளியீடு….!!!!!

போர்குடி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

வளரும் நடிகரான ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது போர்க்குடி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஆராத்யா நடித்துள்ளார். மேலும் படத்தில் சங்கர் தாஸ், அரண்மொழிதேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றார்கள்.

இத்திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைக்க 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் தயாரிக்கின்றது. இந்த நிலையில் திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள வீச்சருவா வீசி வந்தோம் என்னும் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலானது இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளார்கள்.

https://youtu.be/K1E0fMViXsI

Categories

Tech |