Categories
அரசியல் மாநில செய்திகள்

“இபிஎஸ் பசும்பொன் வராததன் காரணம் இதுதான்”…. உண்மையை புட்டு புட்டு வைத்த புகழேந்தி….!!!!

வருடம் தோறும் ஓபிஎஸ் அதிமுக பொருளாளர் என்ற முறையில் தேவர் தங்க கவசத்தை மதுரையில் வங்கியில் இருந்து பெற்றுச் சென்று குருபூஜை விழா கமிட்டியாரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் காரணமாக அந்த பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் தென்மாவட்ட மக்களை இபிஎஸ் எதிரியாக பார்ப்பதன் காரணமாகவே அவர் தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன்னுக்கு வரவில்லை என்ற ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். இபிஸ்க்கு தென் மாவட்ட மக்களை பார்த்தாலே பிடிக்காது. அவர்களை எதிரிகளாகவே அவர் பார்த்து வருகிறார். இபிஎஸ் ஏன்? பசும்பொன்னுக்கு வரமாட்டார் என்று உதயகுமாரிடம் கேட்டால், அவரிடம் சரியான பதில் இல்லை. என்ன காரணம் சொல்லுங்கள் என்று புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |