15 வயது இஸ்லாமிய பெண்கள் திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா கோர்ட் தெரிவித்துள்ளது. ஜாவித் (26) என்பவர் 15 வயதுடைய இஸ்லாமிய சிறுமியை திருமணம் செய்ததால் கைதானார். மனைவி காப்பகத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து கார்பஸ் பெட்டிஷன் போட்ட இவரை நீதிமன்றம் விடுவித்தது. இஸ்லாமில் 15 வயது பெண்களும் திருமணம் செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டில் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது என பொதுச் சட்டம் உள்ளது. ஆனால் இஸ்லாமிய தனிநபர் சட்டங்களில் அடிப்படையில் செல்லும் என்ற இந்த தீர்ப்பு பரபரப்பை கிளப்பியுள்ளது.