Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்!…. “100 கோடி மனிதனுக்கு 1000 கோடி ஆசைகள்”…. “நான்‌‌ மிருகமாய்‌ மாற” டிரைலர் வீடியோ வெளியீடு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது நான் மிருகமாய் மாற என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கழுகு மற்றும் கழுகு 2 திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த  சத்திய சிவா இயக்கியுள்ளார். இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதன் பிறகு படத்தில் ஹரிப்பிரியா மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் வீடியோவில் 100 கோடி மனிதனுக்கு 1000 கோடி ஆசைகள். எளியோரை வலியோர் வாட்டினால், வலியோரை எளியோர் வாட்டுவர். இத சொன்னவன் மட்டும் கையில கிடைச்சான் என்ற பல அழுத்தமான வசனங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த டிரைலர் வீடியோவானது தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://youtu.be/_coSscEU_ys ‌

Categories

Tech |