பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் கடும் சண்டையுடன் விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதில் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த பொம்மை விளையாட்டில் அசீம் தன்னை தள்ளிவிட்டதாக கதறி அழுதார் தனலட்சுமி. இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
சனி, ஞாயிறுகளில் பிக் பாஸில் தோன்றும் கமல், முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவார். இந்நிலையில், பொம்மை விளையாட்டில் நடந்தது குறித்து குறும்படம் போடவா என்று தனலட்சுமியிடம் கமல் கேட்க, போடுங்க சார் என்கிறார் தனலட்சுமி.