Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளுக்கு துணையாக இருந்த தந்தை…. தீயில் உடல் கருகி இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமுதேபள்ளி விக்னேஷ் நகர் பகுதியில் அம்பிகா என்பவர் வசித்து வருகிறார். கணவரை இழந்த அம்பிகாவுக்கு அவரது தந்தை கிருஷ்ணப்பா துணையாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அம்பிகா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றுவிட்டார். இதனால் கிருஷ்ணப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வீடு தீப்பிடித்து எரிந்ததால் கிருஷ்ணப்பா அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

ஆனால் தீ வேகமாக பரவியதால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் தீயில் கருகி முதியவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீ விபத்தில் வீடு மற்றும் அதிலிருந்து பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |