Categories
மாநில செய்திகள்

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல்… கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டம்… மேயர் பிரியா சொன்ன தகவல்…!!!!!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் சுகன்திப் சிங் பேடி போன்ற முன்னிலை வகித்துள்ளனர். மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சென்னை பல்கலைக்கழக ஆட்சி பேரவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு 68 வார்டு உறுப்பினர் அமுதம் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி உரிய தேர்தல் விதிகளின்படி கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியுள்ளது. அப்போது 152வது வார்டு உறுப்பினர் பாரதி சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும். அடையாள அட்டைக்கு கணக்கெடுக்கும் பணி தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட பகுதிகள் பற்றி முழு விவரம் தெரிந்தவாறு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்கப்படாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் அதற்கு கமிஷனர் சுகந்திப் சிங் பேடி தனியார் நிறுவனத்தின் மூலம் தற்போது கணக்கெடுக்கும் பணி மட்டுமே நடைபெறுகின்றது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த பணி மேற்கொள்ளப்பட வேண்டும் ஏற்கனவே உள்ள புள்ளி விவரங்களின்படி 30 ஆயிரம் சாலை வர வியாபாரிகள் இருக்கின்றனர். கணக்கெடுக்கும் பணி முடிந்த பின் அதற்கான அறிவிப்பாளர் வெளியிடப்படும் அதன் பின் நகர் விற்பனை குழு அழைக்கும் சான்றிதழின் அடிப்படையில் தான் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 182 வது வார்டு உறுப்பினர் சதீஷ்குமார் மழைக்காலம் தொடங்கும் சூழலில் மழைநீர் வடிகால் பகுதியை தூர் வாருவதற்கு ஜெட்ராடிங் மற்றும் ஷக்கர் எந்திரம் கொண்ட ஐந்து மண்டலத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் தான் இருக்கிறது.

இதை வைத்து எப்படி சமாளிக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளனர் அதற்கு மேயர் பிரியா மாநகராட்சியில் அந்த வாகனத்தின் எண்ணிக்கை குறைவுதான் ஆனால் சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் காற்று வாரியத்திடம் அதிக வண்டிகள் இருக்கிறது. தேவை ஏற்பட்டால் அங்கிருந்து பெற்று சரி செய்து விடலாம் என கூறியுள்ளார் அதன் பின் நேரமில்லா நேரத்தில் 138 வது வார்டு உறுப்பினர் கண்ணன் அம்மா உணவகத்தில் ஊழியர்கள் நேரத்திற்கு சரிவர வருவதில்லை எனவும் அங்கு உணவு வழங்குவதில் பதுக்கல், குளறுபடி போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது எனவும் தெரிவித்துள்ளார். அதற்கு கமிஷனர் டோக்கன் முறையை பயன்படுத்தி அதன் படியே அம்மா உணவகத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஊழியர்கள் தவறு செய்தால் அதனை ஆதாரங்களோடு தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து 104 வது வார்டு உறுப்பினர் செம்மொழி மெரினா கடற்கரையை ஒட்டி நேப்பியர் பாலம் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் முதலமைச்சர் இடம் இதைக் கொண்டு சென்று இன்று சிறப்பு கவனம் செலுத்தலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார். அதற்கு மேயர் பிரியா இது ஒரு நல்ல திட்டம் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் வாங்கிய பின் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் கேள்வி மற்றும் நேரம் இல்லா முழு நேரம் முடிந்ததும் தீர்மானங்கள் பற்றி நிறைவேற்றப்பட்டது. இதில் பழுதடைந்த பொதுக்கப்பிட கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம்,  அலுவலக கட்டிடம், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் இடிப்பதற்கான அனுமதி போன்ற 70 தீர்மானங்களை மேயர் பிரியா உறுப்பினர்கள் ஒப்புதலோடு நிறைவேற்றியுள்ளார்.

Categories

Tech |