தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை இணையவாசிகள் அனைவரும் பகிர்ந்து விரைந்து குணமாக வேண்டுமென தேசிய அளவில் #SamanthaRuthPrabhu எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள மயோசிடிஸ் நோயால் ஏற்படும் பாதிப்பு குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் கூறுகையில், சத்துக்குறைபாடு, தொற்று ஏற்படுதல் காரணங்களால் மயோசிடிஸ் ஏற்படும். நோயால் தசைகள் வீக்கமடையும். நடக்கும் போது சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த நோயை குணப்படுத்த முடியாது. முறையான சிகிச்சை இல்லை எனில் உயிர் போகும் அபாயம் உள்ளது என்கின்றனர்.