கமல்ஹாசனுக்கு அதிமுக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருவதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார்
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அரசு சார்பில் நடந்தது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜா நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு அதிமுக அரசு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது என்றார். இதில் எந்தவித எந்தவிதமான புரட்சிகர திட்டத்தை கமல்ஹாசன் எதிர்பார்க்கிறார் என அவர் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து அவர் பேசியதாவது,
“எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் என்ற நிலை இருந்தது. இன்று தடையில்லா மின்சாரம் கொடுக்கப்படுகிறது தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும். ஏன் கமல்ஹாசனுக்கும் கூட 100 யூனிட் இலவசம் தானே. இது புரட்சிகரமான திட்டம் இல்லையா? எதை அவர் புரட்சிகரம் என்கிறார். சினிமா படத்தில் புரட்சி செய்வதை சொல்லலாம். அரசியல் நடத்துகின்ற பொழுது எது எதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என எந்தெந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரியும். அதை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது” எனக் கூறினார்.