Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவ அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளது. 2021-22ஆம் ஆண்டு 12ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரபல ஐடி நிறுவனமான எச் சி எல் நிறுவனத்தில் பயிற்சி உடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 2000 பேருக்கு HCL Techbee early career program என்ற திட்டத்திற்கான பயிற்சிக்கு முழு கட்டணம் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் மாநில முழுவதிலும் இருந்து வரும் மாணவர்களுக்கு இந்த நிறுவனத்தில் முழு நேர பணி கிடைக்கும். அதே சமயம் internship பயிற்சியின் போது ஏழாவது மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த பயிற்சி முடிந்து பணியில் சேரும்போது தொடக்கத்தில் ஊதியமாக வருடத்திற்கு 1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை வழங்கப்படும்.இந்த நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே உயர்கல்வியில் பயில பல பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு வழங்கப்படும். அதில் கல்வி கட்டணத்திற்கான ஒரு பகுதியை இந்த நிறுவனம் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |