Categories
தேசிய செய்திகள்

EPFO திட்ட பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. ஓய்வூதியம் விதிமுறைகள் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் EPFO ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களைப் போல தனியா நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் மாதம் தோறும் ஓய்வூதிய தொகையை வழங்குகின்றது. இதில் ஒவ்வொரு EPFO ஊழியரும் EPS திட்டத்தில் உறுப்பினராக சேர்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். அதேசமயம் இந்தத் திட்ட உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயம்.அந்த நபர் பணி ஓய்வு பெற்ற பிறகு அவரின் 58 வயதை எட்டும் போது மாதம் தோறும் ஓய்வூதியம் அவருக்கு வழங்கப்படும். இந்த ஓய்வூதிய தொகை ஊழியரின் மாத சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

அதேசமயம் ஊழியர்களின் சம்பளத்தில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்தில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. ஒருவேளை ஊழியர்ஒருவர் ஒரு நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கு தனது சேவையை தொடர முடியவில்லை என்றால் அவர் தனது 58 வது வயதில் 10C என்ற படிவத்தை பூர்த்தி செய்து தனது முழுத் தொகையையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த திட்டத்திலிருந்து குறைந்தபட்ச தொகையை பெற வேண்டும் என்றால் 50 வயதை எட்டி இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

Categories

Tech |