Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvSL : தொடக்கம் சொதப்பல்….. “பிலிப்ஸ் அதிரடி சதம் 104″….. இலங்கைக்கு சவாலான இலக்கு..!!

இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 167 ரன்கள் குவித்தது.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும்.

இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 1:30 மணிக்குமோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பின் ஆலன்( 1) தீக்ஷனா வீசிய முதல் ஓவரிலேயே அவுட் ஆனார்.அதனைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் டெவான் கான்வேயும் 1 ரன்னில் தனஞ்செய டி சில்வா வீசிய 3ஆவது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலிப்ஸ் நிறுவனம் ஜோடி சேர்ந்த நிலையில் வில்லியம்சனும் 8 ரன்னில் அவுட் ஆனார்.

நியூசிலாந்து அணி 3.6 ஓவரில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதையடுத்து பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டு எடுத்தனர். இதில் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். அதன்பின் மிட்செல் 22 ரன்னில் அவுட் ஆக, தொடர்ந்து வந்த ஜிம்மி நீசம் 5 ரன்னில் அவுட் ஆனார்.

இதற்கிடையே பிலிப்ஸ் தனி ஒரு ஆளாக அதிரடியாக சிறப்பாக ஆடி 19ஆவது ஓவரில் சதம் விளாசினார். பின் பிலிப்ஸ் 64 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 104 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் அவுட் ஆனார்.  இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 167 ரன்கள் குவித்தது. சாண்ட்னர் 11* (5) ரன்களுடனும், டிம் சவுதி 4* ரன்னிலும் அவுட் ஆகாமல் இருந்தனர்.. இலங்கை அணியில் அதிகபட்சமாக ரஜிதா 2 விக்கெட்டுகள் மற்றும் தீக்ஷனா, டி சில்வா, ஹசரங்கா, குமாரா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்..

 

Categories

Tech |